சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப நிலை சற்று உயரும். அதாவது, இயல்பான வெப்ப நிலையை விட, இரண்டு முதல் மூன்று செல்ஷியஸ் அதிகமாக இருக்கும்.
இருப்பினும், வரும், 25 முதல் 28-ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 33 செல்ஷியஸ் வரை இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings