கோவை:
யூடிடிபூரான சவுக்கு சங்கர் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். தனது யூடிபூசில் பல்வேறு செய்திகளை வெளியிடுவதன் மூலம் பிரபலமானவர். இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டிய்ல, பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் குறித்தும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார், தேனியில் தங்கியிருந்து சவுக்கு சங்கரை கைது செய்தனர்.
சவுக்கு சங்கருடன் தங்கியிருந்த டிரைவர் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா பதுக்கியதாக தேனிமாவட்டம் பழனிசெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கரை அனுமதி பெற்று நேற்று மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது சவுக்கு சங்கரிடம் நீதிபதி, அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, அதற்கு பதில் அளித்த சவுக்கு சங்கர், ‘இது பொய் வழக்கு. கோவை சிறையில் என்ன போலீசார் கடுமையாக தாக்கினர். இதனால் என் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு நீதிபதி, கோரிக்கை மனு அளித்ததும் இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து, இந்த வழக்கு22ம் தேதி வரை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாகவும், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் மற்றும் அரசுமருத்துவக்குழுவினர் சிறைக்குசென்று விசாரணை நடத்தி தனித்தனியாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சவுக்கு சங்கர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings