சாண்டியாகோ:
சிலி நாட்டின் தெற்கே பாடகோனியா மண்டலத்திற்கு உட்பட்ட மேகல்லன் சலசந்தி பகுதியில் டெல் சிமன்காஸ் (49) என்பவர், அவருடைய மகன் ஆத்ரியன் சிமன்காஸ் ( 24) என்பவருடன் படகில் சவாரி செய்துள்ளார். அவர்கள் நடுக்கடலில் பயணித்தபோது, திடீரென திமிங்கில கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது.
உருவத்தில் மிகப் பெரிய, ஹம்பேக் வகையைச் சேர்ந்த அந்த திமிங்கிலங்களில் ஒன்று, டெல்லின் மகனைப் படகுடன் சேர்த்து விழுங்கியுள்ளது. இதனை டெல் வீடியோவாக எடுத்திருக்கிறார்.எனினும், சில விநாடிகளில் ஆத்ரியனை அந்த திமிங்கிலம் வெளியே துப்பி விட்டது.
ஆத்ரியனை நடுக்கடலில் வைத்து திமிங்கிலம் ஒன்று படகுடன் சேர்த்து விழுங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
GIPHY App Key not set. Please check settings