பெரம்பூர்
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 1வது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்த நிறை மாத பெண் பயணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஜார்கண்ட் மாநிலம் தேக ஓர்கா, டெல்செராஜல் பகுதியை சேர்ந்தவர் சுதித். இவரது மனைவி மேபால் புனியா (வயது 20).
. நிறை மாத கர்ப்பிணியான இவர் தனது கணவருடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயிலுக்கு காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெண் பயணிக்கு பிரசவ வலி ஏற்படவே துடி துடித்தார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தப் பெண் பயணி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்தப் பெண் பயணியை பெரம்பூர் ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் மார்க்கபந்து மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆர்.எஸ்.ஆர்.ஏ.எம். அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings