ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள திணைகாத்தான்வயல் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலானோர் நகரப் பேருந்தை நம்பியே உள்ளனர். பள்ளி பேருந்து நிறுத்தப் பகுதியில் நிழற்குடையின்றி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, இங்கு நிழற் குடை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!