ஒட்டாவா:
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைப்பதற்கு, அண்டை நாடான கனடா உதவுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
50 மாகாணங்களைக் கொண்ட அமெரிக்காவின் 51வது மாகாணமாக அண்டை நாடான கனடாவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ‘கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் இருக்காது; வர்த்தகப் பற்றாக்குறை இருக்காது. கனடா பாதுகாப்பாக இருக்கும்’ என்றும் அவர் கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல், அமெரிக்கா, கனடா இணைந்து ஒரே நாடாக இருப்பது போன்ற வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கனடா ஆட்சியாளர்களை கோபத்திற்குள்ளாக்கினார்.
அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு, அண்மையில் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி கொடுத்திருந்தார். கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றும் திட்டத்திற்கு துளியளவும் வாய்ப்பில்லை என்றும், இரு நாடுகளும் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் பாதுகாப்பில் பங்காளிகளாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதன் காரணமாக, கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings