சென்னை
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜீவால் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம் பன வடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல நீலிதநல்லூரைச் சேர்ந்த வெல்லியப்பன் என்பவர் கடந்த 8.9.2024 அன்று பாலமுருகனால் கொலை செய்யப்பட்டார்.
அந்த ஊர் கோவில் திருவிழாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இறந்து போனவருக்கும் கொலை குற்றவாளிக்கும் இடையே ஏற்பட்ட முன் விரோதத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நாளில் ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் போலீஸ் எல்லைக்குட்பட்ட உறுதி புழுதிக் குளத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் அவரது உறவினர் பாலாஜி உட்பட சிலர் கொலை செய்துள்ளனர். இச் சம்பவம் 29.5.2024 அன்று கொலை குற்றவாளியின் உறவினர் கொலை செய்யப்பட்டதால் முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது. இச்சம்பவத்தில் 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே 8ம் தேதி இரவு சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் கடற்கரையில் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கானா பாட்டு பாடுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
8.9.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆத்துப் பாளையத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக துரைசாமியை கண்டித்ததால் கொலை செய்யப்பட்டார். வழக்கில் துரைசாமி கைது செய்யப்பட்டார்.
8.9.2024 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன பாறை ஊரைச் சேர்ந்த பழனியை சொத்து தகராறு காரணமாக அவரது உறவினர் கண்ணாயிரம் உள்ளிட்டோர் கொலை செய்தனர். இந்தவழக்கில் 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7.9.2024 அன்று கோவை மாநகர் செல்வபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பழைய தோட்டம் பகுதியில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கப்பட்டதால் ஏற்பட்ட மோதலில் கோகுல கிருஷ்ணன் என்பவரை பிரவீன் உள்ளிட்டோர் கொலை செய்தனர். இந்த வழக்கில் 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
மேலே குறிப்பிட்ட அனைத்து சம்பவங்களும் சொத்து தகராறு, உறவினர்களுக்கு இடையே முன்விரோதம், திடீர் ஆவேசம் போன்றவற்றால் நடை பெற்றுள்ளனவே தவிர, ஜாதி மத மோதல்கள் காரணமாகவோ கலவரத்தை ஏற்படுத்தும் அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ நடைபெற்றவை அல்ல. என்னினும் இச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings