சென்னை
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கினார். அக்கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்தார். தற்போது விரைவில் சின்னம் வெளியாக உள்ளது.
நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று அறிவித்திருந்தார். அதேபோல் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை.
அதே நேரத்தில் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். கட்சி சார்பில் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார்.
மதுரையில் முதலில் மாநாடு நடத்த இருப்பதாக தகவல் வந்த நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் என்ற பகுதியை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட மாநிலங்களில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க திட்டமிட்டிருக்கின்றனர். இதனால் மாநாட்டில் பங்கேற்கும் 10 லட்சம் பேருக்கு உணவு சமைப்பதற்கான ஆர்டரும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings