லக்னோ:
மகா கும்பமேளாவில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து விற்பனை செய்து வரும் கும்பலைப் பிடிக்க சமூக வலைத்தள நிறுவன உதவியை போலீசார் நாடியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கும்பமேளா வெகு விமரிசையாக நடக்கிறது. நாடு முழுதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடி வருகின்றனர். வரும், 26ம் தேதி வரை நடக்கிறது. இதுவரை, 55 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் திரிவேணி சங்கமத்தில் பெண்கள் குளிப்பதை வீடியோவாக எடுத்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர் எனப் புகார்கள் வந்துள்ளன.
பிப்ரவரி 17ம் தேதி பெண் யாத்திரிகர்கள் அளித்த புகார் படி, இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 19ம் தேதி டெலிகிராம் சேனலில் பெண்கள் குளிக்கும் வீடியோக்களை விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறும்போது, “பெண்கள் குளிப்பதைப் போலவும், உடை மாற்றுவதைப் போலவும் உள்ள வீடியோக்களை சில தளங்கள் பதிவேற்றுவது அவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறுவது ஆகும். தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவிடம் இருந்து கணக்கு இயக்குநரை அடையாளம் காணத் தகவல் கேட்டுள்ளோம்.
விவரங்கள் கிடைத்தவுடன் கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
GIPHY App Key not set. Please check settings