பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தின் மசவுரி பகுதியில் உள்ள நூரா பாலம் அருகே நேற்று இரவு லாரியும் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அனைவரையும் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings