எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது
நில மோசடி வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது. ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாமாயல், து.பருப்பு கொள்முதல் டெண்டர்
அடுத்த 2 மாதத்திற்கு தேவையான 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 40 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்..
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு
திருப்பூர் உடுமலை அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதியான கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு. மலைவாழ் மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவிப்பு.
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு. கர்நாடக அணைகளில் இருந்து 50,000 கன அடி நீர் திறந்துள்ளதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,989 கன அடியில் இருந்து 27,665 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறப்பு.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று, ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.,
விஷசாராய வழக்கு ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
வங்கதேச வன்முறை… இந்தியர்களுக்கு எச்சரிக்கை
வங்கதேசத்தில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம். எச்சரிக்கையாக இருக்கும்படி வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings