திருவான்மியூர்:
சென்னை திருவான்மியூர் மயூரபுரம் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோயில் 3 ஏக்கர் 11 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் உருவாக்கிய தேஜோ மண்டல் சபா அமைப்பு நிர்வகித்து வந்தனர். இந்தநிலையில் இந்தகோவில் கடந்த 9.9.1984 அன்று அமைப்பின் காரியதரிசி டி.டி.குப்புசாமி செட்டியார் என்பவர் அறநிலையத்துறை வசம் ஒப்படைத்தார்.
அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகளை கடந்து வந்த இந்த கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக யாக சாலை பூஜைகள் நடைபெற்று மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாஜக முக்கிய பிரமுகரும் முன்னாள் தெலுங்கானனா, புதுச்சேரி ஆளுனருமான தமிழிசை சவுந்தரராஜன் உள்பட முக்கிய பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அமைச்சர் பேட்டி
விழாவில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 38 மாவட்டங்களிலும் அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோயில்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிக்காக மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் நடக்காத கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
தேரோட்டம் நடக்காமல் தடைபட்ட கோயில்களில் மரத்தேர், வெள்ளித் தேர், தங்கத் தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தெப்பத் திருவிழா நடத்த முடியாத கோயில்களில் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. அர்ச்சகர்களுக்கு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings