எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான மீனவர்களை யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.
மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings