in

மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகை இரு மடங்காக உயர்வு

சென்னை

தனியாக மாற்றுத்திறனாளிகளுக்கென ரு துறையை புதிதாக ஏற்படுத்தி நலத்திட்டங்கள் வழங்கும் நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித் தொகை இருமடங்காக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.1,000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.2,000 என்றும்; 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.3,000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.6,000 என்றும்; 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.4,000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.8.000 என்றும் உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

அதேபோல, கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.6 ஆயிரம் என்பதை 12 ஆயிரம் என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார். மேலும், தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல் படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ – மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.7 ஆயிரம் என்பதை ரூ.14 ஆயிரம் இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் உள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் ஏக்க உணர்வுகளைத் தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அனைத்து வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும் அவர்களுக்கு 3 வழங்கப்படும் கல்வி உதவி ஊக்கத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்காக ரூ.14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் அனுமதித்து 10.9.2024 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி படிப்புகளுடன், மாற்றுத் திறனாளி மாணவ- மாணவியர்கள் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்னும் விழைவோடு ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஊக்கமளிப்பதற்காக அவர்களுக்கு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்கீழ் தலா ரூ.1 லட்சம் வீதம் 50 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

உள்ளாட்சி முரசு குடும்ப உறுப்பினர் பி.மோகன் இயற்கை எய்தினார்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை கண்டுகொள்ளாத தமிழக அரசியல்வாதிகள்