சென்னை
பகுஜஙன சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவரை வெட்டிய கும்பல் அவசர அவசரமாக ஓடி வந்ததும், இருசக்கர வாகனத்தில் விறுவிறுவென ஏறி பறந்து சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகமாக்கியது. இதுதொடர்பாக சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் 8 பேர் உடனடியாக சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து பரங்கிமலை இணை ஆணையர் அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன்பு 10 நாட்கள் நோட்டமிட்டதும், கொலை செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே அந்த இடத்திற்கு காத்திருந்ததாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி 5 இருசக்கர வாகனத்தில் வந்து கொலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் கைதான 11 பேரின் வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தைகதான ஒருவதான அருள் என்பவரின் செல்போன் எண்ணைக்கொண்டு விசாரணை நடத்தி திருநின்றவூரைச் சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings