சென்னை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வதும் பின்னர் குறைவதுமாக இருந்தது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது தங்கத்தின் விலை ரூ.55ஆயிரத்தை கடந்தது. அதன் பிறகு படிப்படியாக இறங்கி 53 ஆயிரத்தை வந்தடைந்தது. அட்சயதிருதியை நேரத்தில் மீண்டும் தங்கம் ஏறுமுகத்தை அடைந்தது. அதன் பிறகு படிப்படியாக இறங்குவதும், ஏற்றம் காண்பதுமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,5460ஆக இருந்தது. ஆனால் இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு கண்டு ரூ.54,080ஆக உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,760ஆக உள்ளது. தங்கத்தின் இந்த விலை ஏற்றம் நகைப்பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings