சென்னை:
சென்னையில் பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய வழக்கு பூதாகரமாகியுள்ளது. இதனையடுத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரி மற்றும் துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில் விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான இன்ஸ்பெக்டர் செல்வராணி தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட இத்திற்கு சென்ற போலீசார் சைதாப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தபோது தோனாம்பேட்டையை சேர்ந்தவர் நதியா (வயது 37) என்கிற பாலியல் புரோக்கர் சிக்கினார். அவரது தங்கை சுமதி (43), அவரது இரண்டாவது கணவர் ராமச்சந்திரன், கோவையை சேர்ந்த அசோக்குமார் உள்பட 9 பேரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சென்னை ஆளுனர் மாளிகை அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி குண்டு வீசிய ரவுடி கருக்கா (42) என்பவருக்கும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் ஆளுனர் மாளிகை அருகே குண்டு வீசிய வழக்கில் என்ஐஏ தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள். தொடர்ந்து கருக்கா வினோத்தை காவலில் எடுத்தும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 2022ம் ஆண்டு சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பு இதே கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என தெரியவந்ததும்.
ஆளுனர் மாளிகையில் குண்டு வீசிய வழக்கில் சிறையில் இருந்த கருக்கா வினோத்தை சென்னை தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த நதியா (37) என்பவர் பல லட்சம் செலவு செய்து ஜாமீனில் எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நத்தியாவிடம் நடத்திய விசாரணையில்தான் பூதாகரமான விஷயங்கள் வெளியே வந்தன. கருக்கா வினோத்துடன் சேர்ந்து நதியா பாலியல் தொழில், மது பாட்டில்கள், கஞ்சா வியாபாரம் போன்றவற்றை செய்திருக்கிறார். அதன் பிறகுதான், நதியா வீட்டிற்குள் சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது, பல பூதாகரமான விஷயங்கள் வெளிவரத்துவங்கின.
மொத்தம் 17 பள்ளி மாணவிகளின் 170 ஆபாச வீடியோக்கள், நதியா வீட்டில் இருந்ததாம்.. இந்த ஆபாச வீடியோக்கள் எல்லாமே பள்ளி மாணவிகளுடையது என்பதால், டிஜிபி சங்கர் ஜிவால் கவனத்திற்கு போலீசார் இந்த விஷயத்தை கொண்டு சென்றனர். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டதையடுத்து நடந்த அதிரடி சோதனையில் நத்தியாவின் விபச்சார தொழில் வெளி உலகிற்கு தெரிய வந்தது.
உள்ளூர் புரோக்கர்கள் மூலம் தன்னிடம் சிக்கிய சிறுமிகளை லாட்ஜுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார் நதியா. ஒருநாள் இரவுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை வசூலித்திருக்கிறார் நதியா.
இந்த வழக்கில் பள்ளி மாணவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் நல குழு இதுதொடர்பாக விபச்சார தடுப்பு பிரிவினரிடம் இருந்து விசாரணை அறிக்கையை பெற்று தனியாக விசாரணையை துவக்கியிருக்கிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்களை லிஸ்ட் எடுத்து, ரகசியமாக இந்த விசாரணையை குழந்தைகள் நல குழு நடத்தி வருகின்றனர்.. இந்த விசாரணை முடிந்தால்தான், பள்ளி மாணவிகள் எத்தனை பேர் நதியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற முழு விபரங்கள் தெரியவருமாம்.. மொத்தத்தில், பள்ளி மாணவிகளின் வாழ்க்கையை பந்தாடிய நதியா விவகாரம், பெரும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings