சென்னை
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் அஸ்வத் (வயது 32). இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை மக்கள் குறை கேட்கும் முகாமில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் தான் எம்பிஏ படித்துவிட்டு பண்டிடிக்காவனூர், பெரியபாளையம் சாலையில் 3 ஆண்டுகளாக வேர்க்கடலை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதற்கு முன் சுமார் பத்து வருடங்களாக பாரிமுனையில் இந்த தொழிலை நடத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் நல்ல லாபம் தரும் ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் என்ற விளம்பரத்தை பார்த இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சாட்கலை நம்பி பல தவணைகளாக வாட்ஸ்ஆப் எண்ணில் வந்த வங்கி கணக்குகளில் ரூபாய் 29 கோடியே 6 லட்சம் வரை டெபாசிட் செய்துள்ளேன்.
அதன்பிறகு எந்தவித ரியாக்ஷனும் இல்லை. இதனால் தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோசடியில் ஈடுபட்ட நபரின் வங்கி கணக்குகள் மூலமாக திருவல்லிக்கேணியில் மோசடியில் ஈடுபட்டவர் இருப்பதாக தெரியவந்தது.
அங்கு விரைந்து சென்று விசாரணை செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், சென்னை திருவல்லிக்கேணி கானா பாக் தெருவை சேர்ந முகமது இப்ராகிம் (வயது 34) என்பவரை கைது செய்து பூந்தமல்லி குற்றவியல் முதலாம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இச்செயல் மூலமாக நாட்டின் பல மாநிலத்தைச் சேர்ந்த பல நபர்களை ஏமாற்ற உடந்தையாக இருந்ததும், அதன் மூலமாக பல கோடி ரூபாயை மோசடிக்காரர்கள் சுருட்டியுள்ளதும் தெரியவந்தது.
தலைமறைவு குற்றவாளிகளை இணையவழி குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் தெரியாத நபர் அனுப்பும் லிங்கில் வரும் செய்திகளை பார்த்து பணத்தை இழக்க வேண்டாம் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அவர்கள் பொது மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings