ஆவடி:
ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் 70 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10.78 லட்சத்தை காவல் ஆணையர் சங்கர் வழங்கினார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு ஏற்ப தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து அவர்கள் பயிலும் கல்விக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மகன், மகள் உயர்கல்வி பயில்வதற்காக காவலர் சேம நல நி தியிலிருந்து நூற்றாண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஆவடி போலீஸ் கமிஷனர் சமூக சேவகர் கி.சங்கர் தலைமையில் நடந்தது.
போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள், போலீஸ் அதிகாரிகளின் வாரிசுதாரர்களில் மருத்துவ மாணவர்கள் 5 பேருக்கும், பொறியியல் மாணவர்கள் 17 பேருக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் 43 பேருக்கும், டிப்ளமோ மாணவர் ஒருவருக்கும் மற்றும் இதர படிப்பை பயிலும் 4 பேருக்கும் மாணவ மாணவிகள் என மொத்தம் 70 பேருக்கும் ரூ. 10 லட்சத்து 78 ஆயிரத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் வழங்கினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings