புதுடெல்லி
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதம் (ரெப்போ) குறித்து இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் வெளியிட்டார். அதில், ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும். அமெரிக்க பொருளாதார சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லாததால் வீட்டுக்கடன், தனிநபர் கட்ன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இன்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings