in

ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்: ரிசர்வ் வங்கி

புதுடெல்லி:

ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி 6.5 சதவீதமாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த் தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. நிதி கொள்கைக்குழு கூட்டத்தில் 4க்கு 2என்ற மெஜாரிட்டியில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதங்களில் மாற்றம் மேற்கொள்ளவில்லை.

அதன்படி ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும். அதனால் எஸ்டிஎப் 6.25 சதவீதமாகவும், எம்எஸ்எப் 6.75 சதவீதமாகவும் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

காயம் அடைந்த சிறுத்தை புலி பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

ஜூன் 24ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடக்கம்