in

ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், எழுத்தர் கைது

Registrar and writer arrested

திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கிழவனேரியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(53). விவசாயி. இவரது 3 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை, திருமங்கலம் ஜவகர் நகரைச் சேர்ந்த செந்தில்குமார்(47) வாங்க முடிவு செய்து திருமங்கலத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு, கடந்த 21-ம் தேதி சென்று கூறியுள்ளார். அப்போது சார்பதிவாளர் பாண்டியராஜன்(47) பத்திரப் பதிவு செய்ய முதலில் ரூ.1 லட்சம் கேட்டவர், பின்னர் அனைத்து சான்றுகளையும் கொடுத்ததால் பேரம் பேசி ரூ.70 ஆயிரம் கேட்டுள்ளார். இதுகுறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு செந்தில்குமார் புகார் கொடுத்தார்.

அவர்கள் கூறியபடி, நேற்று பணத்துடன் சென்றபோது, சார்பதிவாளர் பாண்டியராஜன், பத்திரப் பதிவு எழுத்தர் பாலமணிகண்டனிடம்(41) கொடுத்து வங்கிக் கணக்கில் செலுத்தும்படி கூறுமாறு தெரிவித்துள்ளார். அதன்படி அவரது அலுவலகத்துக்குச் சென்று ரூ.70 ஆயிரத்தை செந்தில்குமார் கொடுத்துள்ளார். இதையடுத்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து சார்பதிவாளர் பாண்டியராஜன், பத்திர எழுத்தர் பாலமணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா!

யானைத் தந்தம் விற்க முயன்ற 8 பேர் கைது!