ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தலைவர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஜான்சன் கலந்து கொண்டார். கூட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையினை மாவட்ட இணைச் செயலாளர் வேல்முருகன் வாசித்தார். மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதில் மீண்டும் தலைவராக இப்ராஹிம் தேர்ந்தெடுக்கப்பட்டார். புனித அந்திரோயா பள்ளியின் இளநிலை உதவியாளர் ஜான் பாண்டியன், செயலாளராகவும், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பதிவு எழுத்தர் தாஹிர் உசேன் பொருளாளராகவும், கீழக்கரை ஹமீதியா மேல்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் குத்புதீன் துணைத் தலைவராகவும், பரமக்குடி ஆயிர வைசியர் இளநிலை உதவியாளர் பூபாலன் உ.ப தலைவராகவும்,
பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் பாலாஜி இணைச் செயலாளராகவும், திருவரங்கம் மேல்நிலைப்பள்ளி நிஷா இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக்கொண்டு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
மேலும் இப்பொதுக்குழுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings