in

நடுவானில் மோதிய விமானங்கள்; 2 பேர் பலி – அமெரிக்காவில் பரபரப்பு

அரிசோனா,

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் மரானா பகுதியில் அமைந்த விமான நிலையத்தில் இன்று காலை 8.28 மணியளவில் புறப்பட்டுச் சென்ற செஸ்னா 172 S என்ற விமானமும், லன்கெய்ர் 360 M.K.2 விமானமும் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. விமானங்கள் இரண்டும் ஒற்றை என்ஜின் கொண்டவை. இவை மோதிக் கொண்டதில் தீப்பிடித்து எரிந்தன.

இந்த சம்பவத்தில் 2 விமானங்களிலிருந்த தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விமான பயணி கைது

மும்பையில் ரூ.10 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்