தாம்பரம்:
கோயில் என்றால் பக்தர்கள் தங்கள் மனதில் நினைக்கும் காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக பூஜைகள் செய்து வழிவடுவதற்கான தலமாகும். ஆனால் தற்போது கோயில் என்றால் பணம் பறிக்கும் இடமாக மாறிவருகிறது. பில்லி சூனியம், செய்வினை கோளாறுகளை எடுக்கிறோம் என்று கூறி தனியார் சிலர் கோயில் வைத்து பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு இடங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமாக கோயில்களிலும் இதுபோன்ற அவலநிலை அரங்கேறி வருகிறது. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் இரணியம்மன் கோயில்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெருங்களத்தூர் அருகே இரணியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துயின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். நெடுந்தூரம் பயணம் செல்பவர்கள், புதிய வாகனம் வாங்குபவர்கள் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க இக்கோயில் அம்மனை வழிபட்டு செல்வது அவர்களின் நம்பிக்கை.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சிலர், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சிறப்பு பூஜை செயவதாகவும், வாகனங்களுக்கு எலுமிச்சை, தேங்காய், பூசிணிக்காய் உடைத்து திரிஷ்டி கழிப்பதாகவும் லாவகமாக பேசி பூஜை செய்கின்றனர்.
அவ்வாறு பூஜை முடிந்தவுடன், பக்தர்களிடம் கறாராக பேசி கட்டாய பண வசூலில் ஈடுபட்டு வருவதாக ஏராளமான பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கட்டாய வசூலில் ஈடுபடுவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings