கண்டமங்கலம்:
கண்டமங்கலம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ கன்னியம்மன், பிடாரியம்மன் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த10ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, லஷ்மி ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. மறுநாள் (11ம் தேதி), நாடி சந்தானம், கறிக்கோலம் வருதல் அதனைத் தொடர்ந்து முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை 9 மணி அளவில் கலச புறப்பாடு நடைபெற்று கன்னியம்மன் மற்றும் பிடாரி அம்மன் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து உட்புற பரிகார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தீபாதாரதனை காண்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சிறப்பு அலங்காரத்தில் கன்னியம்மன் மற்றும் பிடாரி அம்மன் வீதி உலா நடைபெறும். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings