in

தொடர்விடுமுறை…7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியூர் பயணம்

சென்னை:

ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலை காரணமாகவும், படிப்பு காரணமாகவும் சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

அந்தவகையில் இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என பண்டிகையுடன் தொடர் விடுமுறையும் வருவதால் ஏராளமானோர் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர். வெளியூர் பயணத்துக்கு முன்கூட்டியே திட்டமிட்டவர்கள் ரயில்கள், பேருந்துகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்தனர்.

கடந்த 9-ம் தேதி முதலே பலரும் சொந்த ஊருக்கு பயணிக்கத் தொடங்கினர். அவர்களது வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், அனைத்து பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்தவுடன் மக்கள் முண்டியடித்துக் கொண்டு, இடம்பிடித்தனர். இதையடுத்து, பயணிகளின் வருகைக்குஏற்ப பேருந்துகள் அடுத்தடுத்து இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கூட்டத்தை போலீஸார் ஒழுங்குபடுத்தினர்.

பேருந்து நிலையத்துக்கு செல்வதற்காக மாநகர பேருந்துகள், பறக்கும் ரயில், மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் ஏராளமானோர் பயணித்தனர். இதனால், மாநகர பேருந்து, ரயில் நிலையங்களிலும் கடும் கூட்டம் காணப்பட்டது. இதற்கேற்ப மாநகர பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன. பலர் தங்களது சொந்த வாகனங்களிலும் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே, நாளை ஆயுதபூஜை என்பதால் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக கோயம்பேடு,பாரிமுனை, தாம்பரம் உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் ஏராளமானோர் குவிந்தனர். இதனால், வடபழனி 100 அடி சாலை, ராஜீவ்காந்தி சாலை (ஐ.டி. காரிடார்), ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை கட்டுப்படுத்தி, வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

65525

டாடா நிறுவனத்தின் அடுத்த நிர்வாகி யார்? ஒரு அலசல்

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம்