in

7 மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடாத நிலையில் காவிரி பாசன விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்தநிலையில் கடந்த வாரம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இதில் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் இல்லை என்று கையை விரித்தது.

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் குடகு உள்பட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை செய்வதால் கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணசாகர் அணைக்கு நீர்வரத்து 14,135 கன அடியாக உள்ளது. 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அணையில் இருந்து சுமார் 532 கன அடி வெளியேற்றப்படுகிறது. அதேபோல் கபினிக்கு 9,807 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பும் நிலை ஏற்பட்டதால் அணையில் இருந்து 2917 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மற்றும் தமிழ்நாடு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை ஆகியவை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 3000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி சுமார் 1223 கனஅடி நீர்வரத்து உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 11.91 டி.எம்சியாக இருந்த நிலையில் இன்று 11.92டிஎம்சியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையில் இருந்து 1000 கனஅடி நீர் குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படுகிறது. 7 மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் – பெட்ரோல் பங்கிற்கு சீல்