சென்னை
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் மரணமடைந்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவராக இருந்தவர வெள்ளையன். வணிகர்களின் பிரச்சனையை அரசுக்கு எடுத்துச் செல்வதில் அயராது பாடுபட்டவர் இவர்.
இந்தநிலையில கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் கடந்த 3ம் தேதி திடீரென மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த 5ம் தேதி அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளையன் உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings