சென்னை:
உள்துறை செயலர் பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு:
சிட்கோ மேலாண் இயக்குநராக இருந்த எஸ்.மதுமதி, பள்ளிக்கல்வி துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த ஜெ.குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், உணவு, கூட்டுறவு துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த கே.கோபால் கால்நடை பராமரிப்பு, பால், மீன்வள துறை செயலராகவும், உணவு பொருள் வழங்கல் ஆணையர் ஹர்சகாய் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப கல்வி ஆணையர் கே.வீரராகவராவ், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த குமார் ஜயந்த், தகவல் தொழில்நுட்ப துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த தீரஜ்குமார், உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த பி.அமுதா, வருவாய் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த வி.ராஜாராமன், தமிழ் வளர்ச்சி, செய்தி துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மீன்வள துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, போக்குவரத்து துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ஏ.சண்முக சுந்தரம், கைத்தறி துறை இயக்குநராகவும், வேளாண் துறை சிறப்பு செயலர் பி.சங்கர், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரி டி.மோகன், உணவு பொருள் வழங்கல் ஆணையராகவும், மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன், ஜவுளி துறை ஆணையராகவும், கடலூர் ஆட்சியர் ஏ.அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த எம்.கோவிந்தராவ், மின்ஆளுமை முகமை இயக்குநராகவும், உயர்கல்வி துறை முன்னாள் செயலர் ஏ.கார்த்திக், சிட்கோ மேலாண் இயக்குநராகவும், கன்னியாகுமரி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அறநிலையத்துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த கே.வி.முரளிதரன், சமூக பாதுகாப்பு துறை இயக்குநராகவும், பெரம்பலூர் ஆட்சியர் கற்பகம், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் இயக்குனர் சந்திரகலா, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
ஈரோடு வணிகவரிகள் இணை ஆணையர் லட்சுமி பாவ்யா தண்ணீரு, நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக முன்னாள் செயல் இயக்குனர் பிரியங்கா, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
சிப்காட் நிறுவன செயல் இயக்குனர் ஆகாஷ், நாகை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வணிகவரிகள் இணை இயக்குனர் (நிர்வாகம்) ரத்தினசாமி, அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை துணை செயலாளர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா, கன்னியாகுமரி ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாக இணை ஆணையர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஈரோடு வணிக வரிகள் இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர் சீதாலட்சுமி, தமிழ்நாடு எய்ஸ்ட் கட்டப்பாடு அமைப்பின் உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குனர் அமிர்த ஜோதி, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் மகேஸ்வரி ரவிக்குமார், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
சமூக சீர்திருத்தத்துறை முன்னாள் செயலாளர் ஆபிரகாம், தொழில்நுட்பக் கல்வி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார துறை திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் கோவிந்தராவ், மின்னாளுமை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) சரண்யா அரி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சங்கர், நில சீர் திருத்த இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
கலை மற்றும் கலாசார இணை இயக்குனர் சிவ சுந்தரவல்லி, தொழில் மற்றும் வணிக கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட வருவாய் அதிகாரி மோகனசந்திரன், பேரிடர் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் இயக்குனர் சுகுமார், இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட துணை ஆணையர் பொற்கொடி, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் இணை மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை முன்னாள் முதன்மை செயலாளர் கார்த்திக், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் பி.சங்கர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
சிறு, குறு, நடுத்தர மொழில் துறை சிறப்பு செயலாளர் பி.மகேஸ்வரி, தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன், தமிழ்நாடு சாலைப் பிரிவு திட்டம் 2ன் திட்ட இயக்குனராகவும், சென்னை கன்னியாகுமரி மொழில்வழிச்சாலை திட்ட இயக்குனராகவும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அலுவல் சாரா மேலாண்மை இயக்குனரகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு பட்டுப்பாட்டாளர் அஜய் யாதவ், தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கண்ணன், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி முன்னாள் கூடுதல் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, எல்காட் செயல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
ஜவுளிகள் ஆணையர் வள்ளலார், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings