மக்கள் வாய்ஸ்
வழக்கறிஞர்களின் நடத்தை குறித்து இந்திய உச்சநீதிமன்றமும், பல மாநிலங்களில் உயர்நீதிமன்றங்களும் பல சந்தர்ப்பங்களில் கண்டனமும் கவலையும் வெளியிட்டுள்ளன. நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சட்டத்தின் பிரதிநிதிகளான வழக்கறிஞர்கள் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் சமூகத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் வைத்துப் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் பாகுபாடின்றி நீதியின் பக்கம் நின்று தமது வாதத்திறமையினால் தமது கட்சிக்காரருக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்ய வேண்டும். இதையெல்லாம் வழக்கறிஞர்கள் அறியாதவர்கள் அல்ல.
ஆனால், சில நேரங்களில், சில வழக்கறிஞர்கள் தமது கண்ணியத்தை இழக்கும் வகையில் நடந்துகொள்வது வருத்தமளிப்பதோடு மட்டுமின்றி, மக்கள் அவர்கள் மீது வைத்திருகும் நம்பிக்கையையும் குலைத்துவிடுகிறது.
அப்படியான ஒரு சம்பவம் தான் நேற்று (ஜூலை 19) அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்களுகு இடையே மோதல் ஒன்று இடம்பெற்று அதில் குறைந்தபட்சம் நான்று நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இருதரப்பு வழக்கறிஞர்களுக்கு இடையே ஏற்பட்ட அந்த மோதலை கூடியிருந்தவர்கள் அனைவரும் காண வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது.
இது ஏதோ சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மட்டுமே ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட சம்பவமாக இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்திலேயே கடந்த 2009ஆம் ஆண்டு மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அப்போது பொலிசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்ட மோதல் தேசிய அளவில் பேசப்பட்டது. அந்த வன்செயலில் கற்கள் வீசப்பட்டன, நீதிமன்ற வளாகத்திலிக்கும் நூலம் பாதிக்கபப்ட்டது, மாண்புமிகு நீதிபதிகளின் அறைகளும் தாக்குதலுக்கு இலக்காயின.
கடந்த 2019இல் டில்லியிலுள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்திலும் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் நிறுத்துவது தொடர்பிலான வாக்குவாதம் வன்செயலுக்கு இட்டுச்சென்றது. இவை ஏதோ தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளேயோ அல்லது இதர தரப்பினரோ தொழில்ரீதியாகவோ அல்லடு தனிப்பட்ட முறையிலோ மோதிக்கொள்வது தொடர்வது ஆரோக்கியமானது அல்ல. இப்படியான மோதலில் ஒருதலைப்பட்சமாக வழக்கறிஞர்களை மட்டுமே குறைசொல்லுவது அல்லது குற்றஞ்சாட்டுவதில் நியாயம் இருக்க முடியாது. அதில் இரண்டு தரப்புகள் உள்ளன. ஆனால் வழக்கறிஞர்கள் தமக்குள்ளேயே, அதுவும் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே மோதிக்கொள்வது, மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கு நம்பிக்கையை குலைத்துவிடும்.
வழக்கறிஞர்களின் பணி புனிதமான ஒன்று. அரசியல் சாசனத்தை போற்றி பாதுகாப்பதில் அவர்களுக்கு பெரும் பங்குள்ளது. அப்படியிருக்கும் போது, அவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளுவது வெட்கக்கேடானது. ஒரு சிலரின் செயலால் சட்டம் பயின்ற அனைவருக்கும் அவப்பெயர் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. சமூகத்தில் பலருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் இப்படிப்பட்ட கண்னியக் குறைவான செயலில் ஈடுபடும் போது அவர்கள் மீது முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலும் இந்த விஷயத்தை ஆராய்ந்து, இனியும் இப்படியான அவப்பெயர்கள் ஏற்படும் சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற குரல்கள் நீதிமன்ற வளாகத்தில் ஒலிப்பதை கேட்க முடிகிறது. சட்டம், ஒழுங்கு, பொது நடத்தை, விதிமுறைகள், பண்பாடுகள், மாண்புகள் என்பது அனைவருக்கும் ஒன்று தான். அனைவரும் அந்த விழுமியங்களை ஏற்று நடக்க வேண்டும். இதில் வழக்கறிஞர்கள் விதிவிலக்கு என்று யாரும் வாதிட முடியாது.
நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கட்சி மற்றும் சாதி ரீதியாக பிரிந்திருப்பதும் அதன் அடிப்படையில் செயல்படுவதும் கூட வருத்தமளிக்கும் விஷயமும் ஆபத்தானதும் கூட. அவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும். இதில் சாதி, மதம், இனம், பக்கச்சார்ப்புகள், அரசியல் நிலைப்பாடு போன்றவைகளுக்கு இடமில்லை.
இனியாவது நீதிமன்ற வளாகத்தில் சட்டவாளர்கள் தமக்குள் மோதிக்கொள்வதை நிறுத்த வேண்டும். பொதுவெளியிலும் கூட அவர்கள் மோதிக்கொள்வது தவிர்க்கபப்ட வேண்டியது என்றாலும், தனிப்பட்ட அம்சங்களில் குறுக்கிட இயலாது. ஆகவே, நீதிமன்றத்தின் மாண்புகளை பாதுகாக்க வேண்டிய வழக்கறிஞர்களே அதை குலைப்பது ஏற்க முடியாதது.
வழக்கறிஞர்கள் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து நீதிமன்ற மாண்பை குறைக்காலம்லும், குலைக்காமலும் நடந்துகொள்வார்கள் என்று நம்புவோம். அது அவர்களின் கடமையும் கூட.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings