in

ஆள் மாறாட்டம் மூலம் ரூ.65 லட்சம் மோசடி செய்தவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

சென்னை

ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் மத்திய குற்றப் பிரிவு இல்ல பிரச்சனை தீர்வு பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம் கீழ் பள்ளிவாசல் தெரு, விளம்பூரை சேர்ந்த காலி து என்பவரது மகன் இப்ராஹிம் (வயது 76) என்பவர் ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் சந்தித்தார். அப்போது தனக்கு சொந்தமாக அம்பத்தூர் தாலுக்கா கொரட்டூர் ஸ்ரீ பாலாஜி நகர் பகுதியில் 2420 சதுர அடி இடம் உள்ளது. 2022ம் ஆண்டு அம்பத்தூர் புகார் கிழக்கு பானு நகர் 5வது தெருவை சேர்ந்த துரைசிங்கம் மகன் விஜயகுமார், பிரகாஷ் ராஜ் என்பவர்கள் தனது இடத்தை அபகரிக்க திட்டமிட்டுஅப்துல் ரஹ்மானோடு கூட்டு சேர்ந்து கொண்டு தான் இறந்து விட்டதாக குறிப்பிட்டு போலி இறப்பு சான்று போலி வாரிசு சான்று ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளனர்.

மனைவி ஹ சீனா பெயருக்கு தான செட்டில்மெண்ட் எழுதியும்  ஹசீனா  பிரகாஷ் பெயருக்கு பொது அதிகாரம் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். தொடர்ந்து பிரகாஷ்  என்பவர் அந்த இடத்தை செஞ்சம்மாள் என்பவருக்கு கிரைய பத்திரம் பதிவு செய்து கொடுத்து ரூ. 90 லட்சம் மதிப்புடைய நிலத்தை அபகரித்துள்ளனர். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் விஜயகுமார் என்பவன் 18.5.2024ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

இதேபோன்று ஷீலா அப்பாவு என்பவருக்கு சொந்தமான அம்பத்தூர், பட்டரவாக்கம் ஞானமூர்த்தி நகரில் உள்ள 2790 சதுர அடி கொண்ட இடத்தை விற்பனைக்கு இருப்பதாக விஜயகுமார் மற்றவர்களுடன் கூட்டு  சேர்ந்து கோவிந்தராஜிடம்  விலை பேசி ரூ,65 லட்சம் பெற்றுக் கொண்டு  ஷீலா அப்பாவு போன்று வேறு பெண்ணை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் கிரையதாரர் கோவிந்தராஜுக்கு கிரைய  விற்பனை செய்துமோசடி செய்து உள்ளான்.

இந்த வழக்கில்18.6.2024 அன்று கைது செய்யப்பட்டுள்ளான்.  விஜயகுமார் என்பவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் இது போன்ற நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. விஜயகுமார் தொடர்ந்து செய்து வரும் நில அபகரிப்பு குற்றங்களை தொடர்ந்து செய்து வருவதை தடுக்கும் நோக்கத்தில் சங்கர் ஆவடி காவல் ஆணையாளர் அவர்களின் அதிரடி உத்தரவின்படி கேடி விஜயகுமார் என்பவனை  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டான்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திருடச் சென்ற வீட்டில் வயிறார சாப்பிட்ட திருடர்கள்

அத்வானி திடீரென மருத்துவமனையில் அனுமதி