in

கரூர் மாவட்ட தி.மு.க மாணவர் அணி பொறுப்புகளுக்கு நேர்காணல்

கரூர்

கரூர் மாவட்ட தி.மு.க மாணவர் அணி ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்புகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் திரளான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைங்கிணங்க, கட்சி ஒருங்கிணைப்புக்குழு ஆய்வுக் கூட்டத்தில்  இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி  வழிகாட்டுதலின்படி, ஒன்றிய, நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் கரூர் மாவட்ட கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சரவண மூர்த்தி, தலைமையில்  மாநில மாணவர் அணி தலைவர் இரா.ராஜீவ்காந்தி, மாநில மாணவர் அணி துணை செயலாளர் பி.எம்.ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பேசுகையில், இந்திய அரசியல் வரலாற்றில்  நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் சமூக மாற்றத்தை விதைத்த ஒரே கட்சி.

மொழிப்பற்றை, இனப்பற்றை தூக்கி சுமந்து பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த இருமொழிக் கொள்கையால், இன்று தகவல் தொழில்நுட்பம் மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள்  சர்வதேச நாடுகளை நோக்கி செல்கின்றனர்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை அடிப்படையில் இன பற்றையும்,  மொழியால், தமிழால் ஒரே தத்துவமாக இந்த சமூகத்தில் திமுக என்ற இயக்கம் இணைத்து வைத்துள்ளது.

இந்த இயக்கத்தில் இணைய உள்ள புதிய உறுப்பினர்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்றார்,

நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் கனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் எம்.எஸ்.கருணாநிதி, மகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் பரத், தலைமை செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில்,  பகுதி செயலாளர்கள் தாரணி சரவணன், சுப்பிரமணி,  ராஜா, குமார், நகர செயலாளர் வாசிம்கான், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, எம்.எஸ்.மணியன், கார்த்திக், மணிகண்டன், முத்துக்குமாரசாமி, வி.கே.வேலுசாமி, தியாகராஜன், கதிரவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் செல்வம், அருள்முருகன், திவாகர், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பத்தே நாளில் உதயநிதி துணை முதல்வராவார்… அமைச்சர் ஆருடம்

தவெக மாநாட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு