சென்னை:
தமிழகத்தில் விவசாயிகளுக்குத் தனி அடையாள என் வழங்கப்படுகிறது. இதற்காகக் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தில் இதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
நிதி மானியம், நலத்திட்ட உதவிகள் பெறுவதில் நடக்கும் முறைகேட்டைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைத்து விவசாய நிலங்களைப் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனித்துவ அடையாள எண் வழங்கப்படுவதால் முறைகேட்டைத் தடுக்க இயலும் எனத் தெரிவிப்பு.