ரூ.1, ரூ.1 என்று 1 கோடி பேரிடம் வாங்கினால் என்கிற சினிமா பட வசனம் போல்…
பெட்ரோல் பங்க்குகளில் மறைமுகமாக கூடுதல் பணம் வசூல்
சென்னை
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் 85 சதவீதம் சர்வதேச நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கம் கண்டு வருவது வாடிக்கையாக இருந்தது. கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, மத்திய, மாநில அரசுகளின் வரியை சேர்த்த பிறகு விற்பனை செய்யபடுகிறது. இந்த வரி விகிதம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வித்தயாசப்படும். இதன் அடிப்படையிலேயே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் கிடையாது என்கிற செய்தியை நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்பது உண்மைதான். இதற்கு முன்பு தினமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. அதாவது பெட்ரோல், டீசல் விலையில் ரூ.1 உயர்வு, ரூ.2 உயர்வு என்று மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தற்போது பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் பெட்ரோல் பங்க்குகளில் தற்போது உள்ள நடைமுறை மறைமுகமாக பெட்ரோல் விலையில் கூடுதல் பணம் நம் மீது திணிக்கப்படுகிறதா என்று தோன்றுகிறது.
663 நாட்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி (வியாழக்கிழமை) இரவு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அதன்படி சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.100.76 ஆக குறைக்கப்பட்டது. ஆனால் இங்குதான் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் ரூ.100.76 என்று எப்படி வசூலிக்க முடியும். அதனால் பெட்ரோல் பங்க்குகளில் ரூ.101 வசூலிக்கிறார்கள். ஆனால் அதற்கு கூடுதல் பெட்ரோல் போடுவது கிடையாது. அப்படி என்றால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கூடுதலாக 24 பைசாவை ஒவ்வொரு வாகன ஓட்டியும் பெட்ரோல் போடும்போது இழக்க நேரிடுகிறது.
சென்னையில் எத்தனை இருசக்கர வாகனம் இருக்கும். எத்தனை பெட்ரோல் கார்கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் அப்படி என்றால் ஒரு பெட்ரோல் பங்கில் சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் பெட்ரோல் போடுகிறார்கள் என்றால் 24 பைசா, 24 பைசாவாக ஒரு பெட்ரோல் பங்கிற்கும் கூடுதலாக தோராயமாக ரூ.24,000 கிடைக்கிறது. ஆனால் ஒருவர் ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டும் போடுவது கிடையாது. 2 லிட்டர், 3 லிட்டர், 5 லிட்டர், 10 லிட்டர் என்று போடுவார்கள். அப்படி என்றால் ஒரு பெட்ரோல் பங்கிற்கு எவ்வளவு தொகை லாபமாக கிடைக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை அடையார் பத்மநாபன் நகரில் உள்ள காயத்திரி ஆட்ரோ சர்வீஸ் என்கிற பெட்ரோல் பங்க்கில் நமது செய்தியாளர் சென்று பெட்ரோல் போட்டுவிட்டு இது தொடர்பாக பெட்ரோல் பங்க்கின் மேலாளரிடமும் கேட்டுள்ளார். அதற்கு அந்த மேலாளர் முறையாக பதில் அளிக்கவில்லை. உடனே இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் தொடர்புகொண்டு ஒரு காவலரை வரவழைத்தார். செய்தியாளர் கூறிய தகவலை கேட்டு அந்த காவலரே அதிர்ந்து போய் உள்ளார். நமக்கே தெரியவில்லை. இப்படி ஒரு விஷயம் பெட்ரோல் பங்குகளில் நடக்கிறதா? என்று அந்த காவலர் வியப்புடன் கேட்டுள்ளார்.
போலீசாரும், நமது செய்தியாளரும் பெட்ரோல் பங்க் மேலாளரிடம் கேட்டபோது எங்களுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது. இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் முறையிடுங்கள் என்று கூறிவிட்டார். இதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் முறையான பதில் அளிக்குமா? அல்லது பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கும் மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தும் போதோ, அல்லது குறைக்கும் போதோ ரவுண்டாக ரூ.101, ரூ.102 உயர்வு என்று தெளிவான மனப்போக்குடன் அமைக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த பெட்ரோல் வவகாரத்தை பார்க்கும்போது அன்னியன் படத்தில் வரும் ஒரு டயலாக்தான நினைவிற்கு வருகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings