தருமபுரி:
கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளவான 84 அடியில் 83.43 அடி வரை நீர் நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில் 106 அடியை எட்டி உள்ளது.
இதையடுத்து கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 556 கன அடி உபரி நீர் என இரண்டு அணைகளில் இருந்து மொத்தம் 25 ஆயிரத்து 556 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நேற்று மாலை நேரத்தில் இருந்து தமிழக எல்லை பகுதிக்கு வரத்தொடங்கியுள்ளது. இதனால் நேற்று மாலை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சிறிய அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன. மேலும் காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings