in

மத்திய பட்ஜெடில் விலை குறையும்… அதிகரிக்கும் பொருட்கள்…

புதுடெல்லி:

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் விலை குறையும், விலை உயரும் பொருட்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டார். அதன் விவரங்களை காணலாம்:

விலை குறையும் பொருட்கள்

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 6 சதவீதமாகவும், ப்ளாட்டினத்துக்கான வரியை 6.4 சதவீதமாகவும் குறைத்து அறிவித்தார். இதன் மூலம்  தங்கம், வெள்ளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்போன்கள், செல்போன் சார்ஜர்கள், மொபைல் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது. இதனால் செல்போன்கள் மற்றும் சார்ஜர்கள் விலை குறையும்.

புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலுமாக வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை வெகுவாகக் குறைகிறது.

இறால், மீன் உணவுகள் உள்ளிட்ட சில கடல் உணவுகளின் மீதான அடிப்படை சுங்க வரி 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் கடல் உணவுகளின் விலை குறையும்.

சூரிய மின்சாரம் தொடர்பான உதிரிபாகங்கள் மீதான சுங்க வரியை கைவிடுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சோலார் செல்கள், சோலார் பேனல்கள் மீதான மூலதனப் பொருட்களுக்கான வரி ரத்தாகிறது.

தோல் மற்றும் காலணி தயாரிப்புகளுக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது. இதனால் காலணிகள் விலை குறையும்.

விண்வெளி, பாதுகாப்பு துறையில் இன்றியமையாத 25 முக்கியமான கனிமங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஃபெரோநிக்கல், ப்ளிஸ்டர் காப்பர், ஆகிய கனிமங்களுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது.

விலை அதிகரிக்கும் பொருட்கள்

அமோனியம் நைட்ரேட் மீதான சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்து நிதியமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அமோனியம் நைட்ரேட் சார்ந்த பொருட்கள் விலை உயரும். 

மக்காத ப்ளாஸ்டிக் மீதான வரியும் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில தொலைதொடர்பு உபகரணங்களில் அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 1 சதவீதம் டிசிஎஸ் விதிக்க அரசு முன்மொழிந்துள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

கிரேக் மோர் எஸ்டேட்டில் 75-வது இந்திய குடும்ப நல சங்க தின விழா.