போபால்:
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில், திருமண விழாவிற்குச் சென்ற கோஷ்டியினர், மீண்டும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் ஜவஹர்புரா கிராமத்திற்கு அருகே சாலையோரம் வேனை நிறுத்தி, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். வேனிலும் சிலர் உட்கார்ந்துகொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று, திடீரென சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வேன் மீதும், நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings