1.வாகனம் மோதி 5 பக்தர்கள் பலி
சமயபுரம் கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் மோதி பலியாகினர்.
2.படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு
சென்னை சாலிகிராமத்தில் நடந்து வந்த சர்தார் 2 படப்பிடிப்பு சண்டைக் காட்சியின் போது சண்டை பயிற்சியாளர் விபத்தில் உயிரிழந்தார்.
3. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அவர் ஏற்கனவே கைதான நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை வில்லிவாக்கத்தில் காவல் ஆய்வாளராக இருந்த பிரித்விராஜ் கைதானார்
4. விஷ சாராய விவகாரம்… காத்திருப்போர் பட்டியலில் 7 போலீசார்
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் உள்பட 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
5. மெட்ரோ ரயில் இயக்கத்தில் மாற்றம்
மொகரம் பண்டிகையை முன்னிட்டு இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings