in

12 ராசி யேர்களுக்கு 2025ம் ஆண்டு எப்படி இருக்கும்…? (பாகம் 1)

2025ம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். இதுவரை சாதித்த சாதனைகளை மென்மேலும் சாதிக்கவும், சோதனைகளை சாதனைகளாகவும் மாற்றும் எண்ணத்துடன் அடியெடுத்து வையுங்கள். 12 ராசிகளுக்கும் என்னென்ன நன்மைகள் ஏற்படும், தீமைகளை தவிர்ப்பது எப்படி என்பதை இதோ காணலாம். இது ஜோதிரால் கணிக்கப்பட்டது…

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே… தொடர்ச்சியாக நன்மைகள் வரும் ஆண்டு.  ஆனாலும் திட்டமிடல் அவசியம். அலுவலகத்தில்  புதிய பொறுப்புகள் வந்து சேரும். முழு கவனத்துடன் செயல்களை செய்யுங்கள். வீட்டில் விசேஷங்கள் வரும். தம்பதியரிடையே சீரான போக்கு நிலவும். வீண் செலவைத் தவிருங்கள். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசிம். புதிய முதலீடுகளை தீவிரமாக சிந்தித்து செய்யுங்கள். அரசு, அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு தொடரும். கலைத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்கள் சோம்பலை விரட்டினால் சாதனைகள் படைக்கலாம். நரம்பு, தலைவலி, அலர்ஜி உபாதைகள் வரலாம். வாகனத்தில் வேகம் கூடாது. செந்திலாண்டவர் வழிபாடு செழுமை சேர்க்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே… உங்கள் எண்ணம் நிறைவேறத் தொடங்கும் ஆண்டு. நேரடி கவனமும் தொடர் முயற்சிகளும் முக்கியம். பணியிடத்தில் ஏற்றமும் மாற்றமும் வரும். மேலதிகாரிகளிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும்.  பணத்தைக் கையாள்வதில் அவசரம் கூடாது. வீட்டில் சந்தோகம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். வரவை சேமிக்கப் பழகுங்கள். பெற்றோர், பெரியோர் உடல்நலனில் அக்கறை அவசியம். மூன்றாம் நபர் விஷயங்களில் தலையிட வேண்டாம். கொடுக்கல் வாங்கலை நேரடியாகச் செய்வது நல்லது. முழுமையான உழைப்பு இருந்தால், சீரான வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட், சூதாட்ட முதலீடு எதுவும் வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். பொது இடங்களில் வாக்குறுதிகள் தருவதைத் தவிருங்கள். கலைத் துறையினர் திறமைக்கு உரிய ஏற்றத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள், காலையில் எழுந்து படிப்பது சிறந்தது. பல், மூட்டு உபாதைகள் வரலாம். பெருமாள், தாயார் வழிபாடு பெருமை சேர்க்கும்.

மிதுனம்:
மிதுன ராசி அன்பர்களுக்கு நிதானத்தால் நிலையான நன்மைகளைப் பெறவேண்டிய ஆண்டு. பணியிடத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். எதிர்பார்த்த உயர்வுகள் நிதானமாகவே கிட்டும். தனிப்பட்ட பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். பணியிட ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம், வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் நடக்கும். எதிர்பார்த்த பொருள் வரவு நிச்சயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்கள். பழைய கடன்களை முழுமையாக செலுத்துங்கள். செய்யும் தொழிலில் உங்கள் செயல்பாடுகளுக்கு ஏற்ப செழிப்பு உருவாகும். கூட்டுத் தொழிலில் புதிய முதலீடுகளில் நிதானம் முக்கியம். அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் தொடரும். ‘உங்கள் வாக்கில் நிதானம் அவசியம். அரசியல்வாதிகள் மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். வாக்குறுதி எதையும் தரும் முன் நிதானமாக யோசியுங்கள். கலைஞர்கள் அரசுவழி ஆதரவைப் பெறுவீர்கள். முயற்சிகளில் முடங்காத மாணவர்களுக்கு மனம்போல நன்மை உண்டாகும். பற்கள், எலும்பு, தலைவலி உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு வாழ்வைத் தழைக்கச் செய்யும்.

கடகம்:
கடகராசி நேயர்களே…,முயற்சிகளால் முன்னேறக்கூடிய ஆண்டு. தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். அலுவலகத்தில் சீரானபோக்கு நிலவும். தடைபட்ட உயர்வுகள் படிப்படியாக வரும். சிலருக்குப் புதிய பணி வாய்ப்பும் அமையும். புதிய பொறுப்புகள் வந்தால் தவிர்க்காமல் ஏற்பது நல்லது. எதிர்பார்த்த அயல்நாட்டு வாய்ப்புகள், தாமதமானாலும் நிச்சயம் கைகூடி வரும். வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வரவு சீராக இருக்கும். சுபகாரியங்களில் அநாவசிய ஆடம்பரம் தவிருங்கள். வீடு, வாகனம் புதுப்பித்தலில் அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசுத்துறையில் உள்ளோர் பொறுமையாக இருப்பதே நல்லது. அரசியல் சார்ந்தவர்கள் அமைதியாக இருப்பதே நல்லது. கையெழுத்திடும் சமயத்திலும், பேச்சிலும் நிதானமாக் இருங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திடீர் யோக வாய்ப்பு உண்டு. மாணவர்கள் இரவில் அவரவர் இல்லத்திலேயே இருப்பது நல்லது. வாகனப் பாதையில கவனச் சிதறல் கூடாது. ரத்தநாளம், நரம்பு சம்பந்தமான உபாதைகள், பெண்களுக்கு ஹார்மோன் உபாதைகள் வரலாம். பைரவரைக் கும்பிடுவது சிறந்தது.

சிம்மம்:
சிம்மராசி நேயர்களே.. சிந்தித்து செயல்பட்டால், சீரான நன்மைகள் கிட்டக்கூடிய ஆண்டு. தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்வதும், தளராமல் உழைப்பதும் நல்லது. பணியிடத்தில் உழைப்பதில் சோம்பல் வேண்டாம். அனுபவம் மிக்கவர்களை மதியுங்கள். எதிர்பாராத இடமாற்றம், பொறுப்பு மாறங்கள் வந்தால் வீண் சச்சரவின்றி ஏற்பதே நல்லது. குடும்பத்தில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். விலகி இருந்த உறவும் நட்பும் தேடிவந்து சேரும். உறவு, நட்பு என யாரிடமும் வீண் வன்மம் வேண்டாம். பொறுமையாக இருந்தால் சுபகாரியங்கள் கைகூடும்.வாரிசுகளால் பெருமை உண்டு. வீண் கண்டிப்பு தவிருங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். இளம் வயதினர் , பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். செய்யும் தொழிலில் முழுமையான ஈடுபாடு காட்டுங்கள். புதிய முதலீடுகளை அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை கேட்டுச் செய்யுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பொறுமையாக இருப்பதே நல்லது. கூடாநட்பு கேடாய் முடியும். விலகி இருப்பது சிறந்தது. படைப்புத் துறையினர் முயற்சிகளுக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். தொலைதூரம் வாகனத்தை ஓட்டும் முன் முழுமையான ஓய்வு அவசியம். ஜீரண உறுப்பு, நரம்பு உபாதை, அல்சர் பிரச்சனை வரலாம். துர்க்கை அம்மன் வழிபாடு நன்மைகளை உண்டாக்கும்.

கன்னி:
கன்னி ராசி நேயர்களே… உயர்வுகள் வரக்கூடிய உன்னதமான ஆண்டு. எதையும் திட்டமிட்டு நேரடி கவனத்துடன் செய்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். புதிய பொறுப்புகள் எண்ணம்போல் வந்து சேரும். எதிர்பார்த்த அயல்நாட்டு வாய்ப்புகள் கைகூடி வரும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் பலன் தரும். இல்லத்தில் ஒற்றுமை உருவாகும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்ட சுபகாரியங்கள் குலதெய்வ வழிபாட்டினால் கைகூடும். உறவுகள் வருகையும் அதனால் ஆனந்தமும் அதிகரிக்கும். இளம் வயதினர் சுபகாரியத்தில் பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து சேரும். விட்டுக்கொடுத்தால், வீட்டில் விடியல் நிரந்தரமாகும். வாழ்க்கைத் துணையுடன் சிறு பிரச்னையும் தவிருங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். நேரான செயல்களும் நேர்மையும் லாபத்தைத் தொடர்ச்சியாக்கும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு மேலிடத்தின் ஆதரவு சீராக இருக்கும். படைப்புத் துறையினர் திட்டமிடலில் முழு கவனமாக இருங்கள். மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குங்கள். வாகனத்தில் சிறு பழுதும் உடன் சீர் செய்யுங்கள். வேகத்தைத் தவிருங்கள். முதுகு, கழுத்து, தோள்பட்டை பிரச்னைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.

அடுத்த ராசிகள் அடுத்த பக்கம்…. பாகம் 2

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை: வாலிபருக்கு மரண தண்டனை

12 ராசி யேர்களுக்கு 2025ம் ஆண்டு எப்படி இருக்கும்…? (பாகம் 2)