சென்னை:
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு, இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ், கூடுதலாக வெப்பம் பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ், கூடுதலாக வெப்பம் பதிவாகி உள்ளது.இது மேலும் சில நாட்கள் தொடரும்.
இன்று முதல் பிப். 22 வரை,தமிழகத்தில் ஒருசில இடங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாகவும், காலையில் லேசான பனிமூட்டமாகவும் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings