சென்னை
பயணிகள் எளிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து செல்வதற்கு ஏதுவாக ரயில் நிலையம் அமைய உள்ளதாக ஆதாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையம் இடநெருக்கடி காரணமாக கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் வெகு தொலைவு பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் சென்னை பயணிகளுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) வாயிலாக தமிழக அரசு ரூ.20 கோடி ரூபாயை இந்த ரயில் நிலையம் கட்டுவதற்குக வழங்கியுள்ளது. சிஎம்டிஏ சார்பில் ரூ.79 கோடி செலவில் ஸ்கைவாக் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்துவதில் நிலவிய சிக்கல் காரணமாக ரயில் நிலைய கட்டுமான பணி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இது சரிசெய்யப்பட்டு ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால், பிளாட்பாரங்களில் (நடைமேடை) மண் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.
வண்டலூருக்கும் ஊரப்பாக்கத்துக்கும் இடையே வரும் இந்த ரயில் நிலையம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எளிதாக அடையும் வகையில் ஸ்கைவாக்குடன் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கட்டுமானப்பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 2 பிளாட்பாரங்கள் இருக்கும். ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கவும், மற்றொன்று பயணிகள் ரயில் நிற்கவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings