ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜநாதன். இவர் பெயிண்டிங்க் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அய்யன்ராஜ் என்பவரிடமிருந்து 7 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி ஆஸ்பெட்டாஷ் கூறை போட்ட வீடு கட்டி குடியிருந்து வருகிறது. இந்த வீட்டிற்கு வரி செலுத்தி முறையாக ரசீது பெற்று வருகிறார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க கோரி கடலாடி மின் பகிர்மான அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது அங்கிருந்த வணிக வரி ஆய்வாளர் முத்துவேல், வீட்டு வரி ரசீதை வைத்து மின் இணைப்பு பெற முடியாது. உங்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்து அதன் நகல் வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த நிலம் ராஜநாதன் பெயரில் இன்னும் பத்திரப் பதிவு செய்யாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே உள்ளது.
எனவே ராஜாநாதன் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி நில உரிமையாளரான அய்யன்ராஜ் என்பவரின் பெயரில் அவரது பத்திரத்தை வைத்து மின் இணைப்பு கேட்டு ஆன்லயனில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அந்த இடத்தை பார்வையிட கடலாடி மின் பகிர்மான அலுவலகத்தில் பணிபுரியும் உதவிப்பொறியாளர் கணேஷ்குமார் மற்றும் வணிகவரி ஆய்வாளர் முத்துவேல் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் இடத்தில் புதிதாக மின் மீட்டர் மற்றும் மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, ராஜநாதனிடம் வந்து சென்ற செலவிற்காக ரூ.2000 கேட்டுள்ளனர். அதற்கு மனுதாரர் தன்னிடம் தற்போது பணம் ஏதும் இல்லை. பின்னர் சுமார் 10 நாள்கள் கழித்து மீண்டும் அலுவலகம் சென்று மின் இணைப்பு பற்றி விசாரிக்க உதவிப் பொறியாளர் மின் மீட்டருக்கு ஆன்லயனில் ரூ.7000 கட்டவேண்டும். அதன் பின்னர் மின்கம்பம் மற்றும் இணைப்புக்கு மதிப்பீடு தயார் செய்ய வேண்டும், அதன் விபரங்களை வணிகவரி ஆய்வாளர் முத்துவேல் சொல்வார். அவரை பாருங்கள் என்று கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து முத்துவேலை அணுகியபோது, மின் இணைப்புக்கான மதிப்பீடு தயார் செய்ய ஆன்லயனில் பணம் கட்டியது போக எங்களுக்கு தனியாக 5000 செலவுக்கு தந்தால் தான் வேலையாகும் என கூறியுள்ளார். அதற்கு மனுதாரர், தான் ஒரு கூலி தொழிலாளி. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறயுள்ளார். அப்போதும் விடாமல் ரூ.4000 கொடுத்தால்தான் வேலையாகும் என கறாராக கூறியுள்ளார்.
ராஜநாதன் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தை நாடியுள்ளார். இது தொடர்பாக புகார் ஒன்றை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், ரசாயனம் தடவிய ரூபாய் நேட்டுக்களை கொடுத்து வணிவரி ஆய்வாளர் அலுவலக சுற்றுவட்டார பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர். அப்போது வணிகவரி ஆய்வாளர் முத்துவேலிடம் ராஜநாதன் லஞ்சப்பணத்தை அவ்வலுவலக கேங்மேன் செந்தூர்பாண்டி என்பவரிடம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி செந்தூர்பாண்டி அப்பணத்தை பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றிவளைத்தனர். செந்தூர்பாண்டியிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து கடலாடி மின் பகிர்மான அலுவலக உதவிப்பொறியாளர் கணேஷ்குமார், வணிகவரி ஆய்வாளர் முத்துவேல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings