in

உபதலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி விழா

நீலகிரி:

நீலகிரி மாவட்டம் உபதலை அரசு மேனிலைப் பள்ளியில் 190 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளிக்கு தமிழக அரசின் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதும் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

இத்தொகை மூலம் பள்ளியின் அனைத்து வகுப்பறைகளும் ஆய்வகங்களும் முதன்முதலாக வண்ணம் அடிக்கப்பட்டு அழகுற திகழ்கிறது. பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் வகுப்பறை ஒன்றும் மேடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  கீதா அவர்கள் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு புது பொலிவுடன் காணப்படும் வகுப்பறைகள், மேடை, டிஜிட்டல் வகுப்பறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் இப்பள்ளி வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில்  100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என்று ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி,ஓவியப்போட்டி ஆகியவற்றில் ஆரம்பப் பள்ளி பிரிவு, நடுநிலைப்பள்ளி பிரிவு, மேல்நிலைப்பள்ளி பிரிவுகளில்  முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவியும் தற்போதைய  பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி பேராசிரியருமான முனைவர் இரா செல்வி அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பள்ளிக்கு தேவையான பொருட்களை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  ராமச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி உமா மகேஸ்வரி, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பாபு ஆகியோர் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர்  ஐயறின் ரெஜி மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கினர்.

விழாவில் பேசிய நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர்  நந்தகுமார் அவர்கள் மாணவர்கள் செல்போன் அதிகளவு பயன்படுத்துவது வரும் காலங்களில் அவர்களுக்கு தூக்கம் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கும் என அறிவுரை வழங்கினார்.

விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் நீலகிரி மாவட்ட உதவி திட்ட அலுவலரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான  அர்ஜுனன், சத்யசாய் அறக்கட்டளை நிர்வாகிகள், உபதலை பஞ்சாயத்து தலைவர்  பாக்கியலட்சுமி சிதம்பரம், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த அக்கமாதேவி அவர்களின் மகள் ஹேமா ராமன், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்  சந்துரு, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி உஷா தேவி, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை  நிர்மலா, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர்  பாபு, பள்ளிக்கு வண்ணம் அடித்த ஒப்பந்ததாரர் திரு சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வருகை புரிந்தவர்களை பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் சிவகுரு வரவேற்று பேசினார். விழா நிகழ்ச்சிகளை பள்ளியின் முதுகலை கணித ஆசிரியை  எபனேசர் ராஜாத்தி தொகுத்து வழங்கினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மக்கள் வாய்ஸ்

உள்துறை செயலாளர் அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்