விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி, தேர்தல் நடத்தும் அலுவலர் மு.சந்திரசேகர் தலைமையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கி எண்ணிக்கை தொடங்கியது. 150 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 7வது சுற்று முடிவிலேயே 24,169 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். 9வது சுற்றில் 33,353 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.
20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் 67,169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் 1,23,195 வாக்குகளும், பாமக 56,026 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 10,469 வாக்குகளும் பெற்றது. இதையடுத்து திமுகவினர் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings