மதுரவாயல்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-154, ராமாபுரம் பகுதியில் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் செ.ரவி ஏற்பாட்டில் நடமாடும் தண்ணீர் வாகனம் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் மதுரவாயல் பகுதி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காரப்பாக்கம் க.கணபதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரபாகராஜா ஆகியோர் கலந்து கொண்டு நடமாடும் தண்ணீர் வாகனத்தை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு தர்பூசனி பழம், பழரசம், மோர் ஆகியவற்றை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான இராமாபுரம் வ.செல்வகுமார், பகுதி திமுக பொருளாளரும், மாமன்ற உறுப்பினருமான ராஜி, வட்ட செயலாளர் ஆ.ராதாசெல்வம், மூன்லைட் ரவி, மாவட்ட பிரதிநிதிகள் கோ.ராமகிருஷ்ணன், எத்திராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings