சென்னை:
வாரணாசியிலிருந்து தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு 30 நிமிடத்தில் தீர்வு காணப்பட்டது. சென்னை: வாரணாசியிலிருந்து தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு 30 நிமிடத்தில் தீர்வு காணப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி வாரணாசியில் நடைபெற்றது. தென்னிந்தியா அணி சார்பில் தமிழ்நாட்டிலிருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டனர்.போட்டியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தனர். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியவில்லை. ரயிலில் ஏற முடியாத நிலையில் வாரணாசி ரயில் நிலையத்திலேயே தமிழ்நாடு வீரர்கள் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் தங்களை மாநில அரசு அழைத்துவர உதவக் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாரணாசியில் தவிக்கும் தமிழ்நாடு வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்துவரத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. வாரணாசியில் இருந்து தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு 30 நிமிடத்தில் தீர்வு காணப்பட்டது. விமான டிக்கெட் எடுத்துத் தந்து மாற்றுத்திறனாளி வீரர்கள் சென்னை திரும்பத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் விளையாட்டுத்துறை செயலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டுக்கு விமானத்தில் வந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்

GIPHY App Key not set. Please check settings