கரூர்:
கரூர் அருகே நெரூர் சதாசிவபிரமேந்திராள் கோயிலில் சாப்பிட்ட இலையில் உருண்டு பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது நெரூர் கிராமம். இங்கு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு முக்தியடைந்த சதாசிவ பிரமேந்திராள் கோயிலும், சிவன் கோயிலும் உள்ளன. சதாசிவ பிரமேந்திராளின் 110 வது ஆராதனை விழா நடைபெற்று வருகிறது
இதன் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு நூதன முறையில் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் சதாசிவபிரமேந்திராளுக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து நகர்வலம் வந்து நெரூர் அக்ரஹாரத்தில் சிறப்பு பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட பிறகு தாங்கள் சாப்பிட்ட இலைகளில் ஆண், பெண் பக்தர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் நேர்த்திக் கடனுக்காக உருண்டனர். அப்போது ஜெய், ஜெய் ரங்கா என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
கரூர், திருச்சி, சென்னை, கோவை, மும்பை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். எச்சில் இலையில் உருள்பவர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
ஒரு சில அமைப்புகள் இந்த எச்சில் இலையில் உருளும் நிகழ்வினை சாதிய காழ்ப்புணர்ச்சியோடு நடத்தப்படுவதாக கூறி கடந்த கடந்த 2014 ஆண்டு வழக்கு தொடுத்து இந்த நிகழ்வை நிறுத்தினார். கோயில் நிர்வாகத்தினர் இந்த நிகழ்வை நீதிமன்ற அனுமதியோடு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தி வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings