லக்னோ
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் என்கிற கிராமத்தில் நேற்று ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதனை பாபா நாராயன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா என்பவர் நடத்தினார்.
பலி 122ஆக உயர்வு
இந்த கூட்டத்திற்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கூட்டம் முடிந்ததும் ஒருவர்பின் ஒருவராக செல்லும் போது முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அப்போது ஏராளமானோர் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்து சென்றனர்.
இதில் முதலில் திரளான பெண்கள் இறந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவமனையில் திரளான கூட்டம் இருந்தது. ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொருத்தரும் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 122ஆக உயர்ந்தது. மேலும் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று தெரிகிறது.
யார் இந்த பாபா?
நாராயண் சகார் ஹரி என்கிற சகார் விஷ்வ ஹரி என்பதுதான் போலே பாபாவின் இயற்பெயர். இவரது ஆன்மீகத்தை அரியானா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இவரை பின்பற்றும் பக்தர்கள் உள்ளனர். இவரை காண்பதற்காக ஒட்டுமொத்தமாக மக்கள் குவிந்ததே இந்த மிகப்பெரிய உயிரிழப்பு நிகழ்வுக்கு காரணம்.
ஏன் இந்த சம்பவம்…?
சொற்பொழிவு கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் 50 ஆயிரம் பேர் மட்டுமே. ஆனால் அங்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததுள்ளனர்.
மேலும் பாபாவின் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டு ஏராளமானோர் சென்றதாகவும் கூறப்படுகிறது.
தடுக்காமல்விட்டது ஏன்?
ஆன்மீக நிகழ்வில் நடந்த விபத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம். போலீசார் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை கவனித்தார்களா? பல லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடியபோது அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன்? ஒரே நேரத்தில் அனைத்து மக்களும் வெளியேறியபோதும், பாபாவை சந்திக்க முண்டியடித்துக் கொண்டு சென்றபோதும் முறையான ஏற்பாடு செய்யாதது ஏன்? என்கின்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings