in

CuteCute

குன்னூர் பகுதியில் புதிய கலைக்கல்லூரி திறப்பு‌.

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

நீலகிரி மாவட்டம், குன்னூர்,

*நீலகிரி மாவட்டம் குன்னூரில் புதிதாக அரசு (தற்காலிக) கலைக் கல்லூரியை தமிழக முதலமைச்சர்  மு,க,ஸ்டாலின். காணொளி வாயிலாக  திறந்து வைத்தார்……..*

தமிழகத்தில் உயர்கல்வி துறையின் சார்பாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி, தின்டுக்கல் மாவட்டம்  நத்தம், சென்னை ஆலந்தூர், விழுப்புரம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்,  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவள்ளூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் கொளகாநத்தம், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டாபிடராம், ஆகிய 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கி வைத்ததை ஒட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயங்கி வரும் பழமை வாய்ந்த அறிஞர் அண்ணா அரசு பள்ளி கட்டிடத்தில் (தற்காலிக) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதலமைச்சர் மு, க,ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார் 

நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு, பெ, சாமிநாதன்,நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே உதகை மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் இரண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வந்த நிலையில் குன்னூரில் அரசு கல்லூரி திறக்கப்படுவதால் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்க உள்ளதாக அரசு தலைமை கொறடா மற்றும் தமிழ் வளர்ச்சி செய்தித் துறை அமைச்சர் ஆகியோர் தெறிவித்தனர் மேலும் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு புதிய கட்டிடத்தில் திறக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சேலம் கோட்ட மேலாளர் இன்று குன்னூர் ரயில்வே நிலையத்தில் ஆய்வு.

குன்னூர் பகுதியில் சாக்லேட் ருசித்த கரடியால் பரபரப்பு.